.: நகைச்சுவைகள்

July 31, 2009

நகைச்சுவைகள் (தொகுப்பு – 01)

நோயா‌ளி: டா‌‌க்ட‌ர் எதை‌ப் பா‌ர்‌த்தாலு‌ம் இர‌ண்டு இர‌ண்டாக தெ‌ரியுது.
டா‌க்ட‌ர்:அ‌ப்படியா அ‌ந்த சோபா‌‌வி‌ல் போ‌ய் உ‌ட்காரு‌‌ங்க கூ‌‌ப்‌பிடு‌கிறே‌ன்.
நோயா‌ளி :  இர‌ண்டு சோபா இரு‌க்கே, எதுல உ‌ட்கார‌ட்டு‌ம் டா‌க்ட‌ர்.

“ஏண்டி. மாப்பிள்ளை பஸ் கண்டக்டரா இருந்தவர்னு எப்படிக் கண்டுபிடிச்சே?”
“மொய்ப் பணத்தையெல்லாம் விரல் இடுக்கிலே மடிச்சி மடிச்சி வச்சுக்கிறாரே!”

“குடி குடியைக் கெடுக்குமாடா?”
“நீ வாங்கிக் கொடுத்தா உன் குடி கெடும். நான் வாங்கிக் கொடுத்தா
என் குடி கெடும்!”

“நேற்று உங்க வீட்டுக்கு வந்த திருடனை எப்படி பிடித்தீர்கள்?”
“எதேச்சையாக என் மனைவி செஞ்சிருந்த மைசூர்பாகை அவன் மீது வீச அதனால் பலத்த அடிபட்டு விழுந்தான்!”

திருடன் 1: மாசக் கடைசியிலே திருடப் போனது ரொம்பவும் தப்பாய் போச்சு.
திருடன் 2: ஏன் ஒண்ணுமே கிடைக்கலியா?
திருடன் 1: அதில்லே, திருடப் போன வீட்டில் வீட்டுக்காரன் என்னைப் புடிச்சுக் கெஞ்சிக் கூத்தாடி இருபது ரூபாய் கடன் வாங்கிட்டுத்தான் விட்டான்.

ஒருவர்: எதுக்கு டாக்டர் உங்க கையையே நீங்க புடிச்சுப் பார்த்துட்டு இருக்கீங்க?
டாக்டர்: பேஷண்ட் யாரும் வரலே ‘டச்’ விட்டுப் போயிடக் கூடாதில்ல அதான்!’

“என்ன டாக்டர் மருந்துச் சீட்டில ஸ்டெதஸ்கோப்-1 சிரிஞ்சு 2-ன்னு எழுதியிருக்கீங்க?”
“அதெல்லாம் இல்லாம உனக்கு எப்படிப்பா பரிசோதனை செய்து ஊசி போட முடியும்? மொதல்ல அதையெல்லாம் வாங்கிட்டு வா!”

சமையல்காரன்:  நான் வேலையை விட்டு விலகிக் கொள்கிறேன் சார். உங்க மனைவியை சமாளிக்க முடியவில்லை!
அவர்:  ஏன் மிகவும் கண்டிப்பாக இருக்கிறாளா?
சமையல்காரன்:  நான் இங்கு வேலைதான் செய்கிறேன். எப்போது வேண்டுமானாலும் போய்விட முடியும் என்பதை மறந்துவிட்டார்.
உங்களை அதிகாரம் செய்வது போல செய்கிறாரே!

மகேஷ் : ஒரு வாரமா ‘கழுத்து சுளுக்கு’னு அவதிப்பட்டாயே! இப்ப எப்படி சரியா போச்சு?
ரமேஷ்: பின் பக்கமிருந்த லேடி டைப்பிஸ்ட்டை முன் பக்கம் மாத்திட்டாங்க!

நன்றி. (MSN JOKES)