பாரதி

January 8, 2014

Line

பாரதி

Line

Line

நன்றி:You tube

Advertisements

பாரதியார் பாடல்கள்

April 5, 2012

யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல்
இனிதாவது எங்கும் காணோம்

தேமதுரத் தமிழோசை உலகமெலாம்
பரவும் வகை செய்தல் வேண்டும்

வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி
வாழிய வாழியவேஎன்றும்,

சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம்
தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்!”

தமிழ்மொழி

யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல்
இனிதாவது எங்கும் காணோம்,
பாமரராய் விலங்குகளாய், உலகனைத்தும்
இகழ்ச்சிசொலப் பான்மை கெட்டு,
நாமமது தமிழரெனக் கொண்டு இங்கு
வாழ்ந்திடுதல் நன்றோ? சொல்லீர்!
தேமதுரத் தமிழோசை உலகமெலாம்
பரவும்வகை செய்தல் வேண்டும்.

யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல்,
வள்ளுவர்போல் இளங்கோ வைப்போல்,
பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை,
உண்மை, வெறும் புகழ்ச்சியில்லை,
ஊமையராய்ச் செவிடர்களாய்க் குருடர்களாய்
வாழ்கின்றோம் ஒரு சொற் கேளீர்!
சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம்
தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்!

பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்
தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும
இறவாத புகழுடைய புதுநூல்கள்
தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும்
மறைவாக நமக்குள்ளே பழங் கதைகள்
சொல்வதிலோர் மகிமை இல்லை
திறமான புலமையெனில் வெளி நாட்டோ ர்
அதைவணக்கஞ் செய்தல் வேண்டும்.

உள்ளத்தில் உண்மையொளி யுண்டாயின்
வாக்கினிலே ஒளி யுண்டாகும்
வெள்ளத்தின் பெருக்கைப்போல் கலைப்பெருக்கும்
கவிப்பெருக்கும் மேவு மாயின்
பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடரெல்லாம்
விழிபெற்றுப் பதவி கொள்வார்,
தெள்ளுற்ற தமிழமுதின் சுவைகண்டார்
இங்கமரர் சிறப்புக் கண்டார்.

பாரதியார் பாடல்கள்

சின்னஞ்சிறு கிளியே ……………..

 சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
செல்வ களஞ்சியமே
என்னக் கலிதீர்த்தே உலகில்
ஏற்றம் புரிய வந்தாய்

சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
செல்வ களஞ்சியமே
என்னக் கலிதீர்த்தே உலகில்
ஏற்றம் புரிய வந்தாய்

சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
செல்வ களஞ்சியமே
செல்வ களஞ்சியமே

பிள்ளைக்கனியமுதே கண்ணம்மா
பேசும் பொற்சித்திரமே
பிள்ளைக்கனியமுதே கண்ணம்மா
பேசும் பொற்சித்திரமே
அள்ளி அணைத்திடவே என் முன்னே
தேனே.. ஆடி வரும் தேனே…
சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
செல்வ களஞ்சியமே
செல்வ களஞ்சியமே

உச்சிதனை முகர்ந்தால் கருவம்
ஓங்கி வளருதடி
மெச்சி உனை ஊரார் புகழ்ந்தால்
மேனி சிலிர்க்குதடி..
மேனி சிலிர்க்குதடி..

சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
செல்வ களஞ்சியமே
செல்வ களஞ்சியமே

கன்னத்தில் முத்தமிட்டால் உள்ளந்தான்
கள்வெறி கொள்ளுதடி..
கன்னத்தில் முத்தமிட்டால் உள்ளந்தான்
கள்வெறி கொள்ளுதடி.
உன்னைத் தழுவிடிலோ கண்ணம்மா
உன்மத்தம் ஆகுதடி (உன்னைத் )

சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
செல்வ களஞ்சியமே
என்னக் கலிதீர்த்தே உலகில்
ஏற்றம் புரிய வந்தாய்
சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
செல்வ களஞ்சியமே
செல்வ களஞ்சியமே

காணி நிலம் வேண்டும் பராசக்தி…….

காணி நிலம் வேண்டும்-பராசக்தி
காணி நிலம் வேண்டும்-அங்கு,
தூணில் அழகியதாய்-நன்மாடங்கள்
துய்ய நிறத்தினதாய்-அந்தக்
காணி நிலத்திடையே-ஓர் மாளிகை
கட்டித் தரவேணும்-அங்கு,
கேணி யருகினிலே-தென்னைமரம்
கீற்று மிளநீரும்

பத்துப் பன்னிரண்டு-தென்னைமரம்
பக்கத்திலே வேணும்-நல்ல
முத்துச் சுடர்போலே-நிலாவொளி
முன்புவர வேணும்?அங்கு
கத்துங் குயிலோசை-சற்றே வந்து
காதிற்பட வேணும்-என்றன்
சித்தம் மகிழ்ந்திடவே-நன்றாயிளந்
தென்றல்வர வேணும்.

பாட்டுக் கலந்திடவே-அங்கேயொரு
பத்தினிப் பெண்வேணும்-எங்கள்
கூட்டுக் களியினிலே-கவிதைகள்
கொண்டுதர வேணும்-அந்தக்
காட்டு வெளியினிலே-அம்மா!நின்தன்
காவலுற வேணும் என்தன்
பாட்டுத் திறத்தாலே-இவ்வையத்தைப்
பாலித்திட வேணும்.

காக்கைச் சிறகினிலே…………

காக்கை சிறகினிலே நந்தலாலா – நின்றன்
கரிய நிறம் தோன்றுதையே நந்தலாலா

பார்க்கும் மரங்களெல்லாம் நந்தலாலா – நின்றன்
பச்சை நிறம் தோன்றுதையே நந்தலாலா

கேட்கும் ஒளியில் எல்லாம் நந்தலாலா – நின்றன்
கீதம் இசைக்குதடா நந்தலாலா

தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா – நின்னை
தீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா

நல்லதோர் வீணை செய்தேன்……….

நல்லதோர் வீணைசெய்தே-அதை
நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?
சொல்லடி, சிவசக்தி-எனைச்
சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்,
வல்லமை தாராயோ-இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கே?
சொல்லடி,சிவசக்தி!-நிலச்
சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ?

விசையுறு பந்தினைப்போல்-உள்ளம்
வேண்டிய படிசெலும் உடல்கேட்டேன்,
நசையுறு மனங்கேட்டேன்-நித்தம்
நவமெனச் சுடர்தரும் உயிர்கேட்டேன்,
தசையினைத் தீசுடினும்-சிவ
சக்தியைப் பாடும்நல் அகங்கேட்டேன்,
அசைவறு மதிகேட்டேன்-இவை
அருள்வதில் உனக்கெதுந் தடையுளதோ?

சிந்து நதியின் இசை …………….

சிந்து நதியின் மிசை நிலவினிலே
சேர நன்னாட்டிளம் பெங்களுடனே
சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்ஸ்
தோனிகள் ஓட்டி விளையாடி வருவோம்

ஆஹ் ஹ ஹ…

கங்கை நதிப்புரத்து கோதுமைப் பண்டம்
கங்கை நதிப்புரத்து கோதுமைப் பண்டம்
காவிரி வெற்றிலைக்கு மாருகொல்லுவோம்
சிங்க மராட்டியர்தம் கவிதைகொண்டு
சேரத்து தந்தங்கல் பரிசலிப்போம்
சிங்க மராட்டியர்தம் கவிதைகொண்டு
சேரத்து தந்தங்கல் பரிசலிப்போம்

சிந்து நதியின் மிசை நிலவினிலே
சேர நன்னாட்டிளம் பெங்களுடனே
சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்து
தோனிகள் ஓட்டி விளையாடி வருவோம்

மனசிதி நீகோசம் மனுகட நீகோசம்
மனசிதி நீகோசம் மனுகட நீகோசம்
மமதா அவேதம் மாயனி மதுபாசம்
மமதா அவேதம் மாயனி மதுபாசம்
மனசிதி நீகோசம் மனுகட நீகோசம்

நீ கண் கணராகம்
ஆஹ் ஹ ஹான்
நீ மதி அனுராகம்
ஆஹ் ஹ ஹான்
மன ஈ வைபோகம்
ஆஹ் ஹ ஹான்
பஹுதன் அலயோகம்
ஆஹ் ஹ ஹான்
வலபுல புல்லாசம்
ஆஹ் ஹ ஹான்
நெரபுல தெரஹாசம்
ஆஹ் ஹ ஹான்
வஹதென அவாஅகஸ்ம்
ஆஹ் ஹ ஹான்
சா நலிவுலு ஆவேசம்
அஹ் ஹ ஹ….
ஹ்ம்ம்ம்…ஸ்
சிங்கலத் தீவினுக்கோர் பாலமமைப்போம்
சேதுவை மேடுடுத்தி வீதி அமைப்போம்
சிங்கலத் தீவினுக்கோர் பாலமமைப்போம்
சேதுவை மேடுடுத்தி வீதி அமைப்போம்
வங்கத்தில் ஓடி வரும் நீரின் மிகையால்
மையத்து நாடுகலில் பயிர் செய்துவோம்
வங்கத்தில் ஓடி வரும் நீரின் மிகையால்
மையத்து நாடுகலில் பயிர் செய்துவோம்

சிந்து நதியின் மிசை நிலவினிலே
சேர நன்னாட்டிளம் பெங்களுடனே
சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்து
தோனிகள் ஓட்டி விளையாடி வருவோம் அஹ் ஹ ஹ ….

அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்…..

அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்-அதை
அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்
வெந்து தணிந்தது காடு-தழல்
வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ?
தத்தரிகிட தத்ரிகிட தித்தோம்.

நின்னை சரணடைந்தேன்…….

நின்னை சரணடைந்தேன்,
நின்னை சரணடைந்தேன், கண்ணம்மா
நின்னை சரணடைந்தேன்

நின்னை சரணடைந்தேன், கண்ணம்மா
நின்னை சரணடைந்தேன்

பொன்னை, உயர்வை, புகழை விரும்பிடும்
பொன்னை, உயர்வை, புகழை விரும்பிடும்
என்னை கவலைகள் தின்ன தகாத்தென்று..

நின்னை சரணடைந்தேன், கண்ணம்மா
நின்னை சரணடைந்தேன்

மிடிமையும் அச்சமும் மேவி என் நெஞ்சில்
குடிமை புகுந்தன, கொண்டுருவை போக்கென –

நின்னை சரணடைந்தேன், கண்ணம்மா
நின்னை சரணடைந்தேன்

துன்பம் இனி இல்லை, சோர்வில்லை
சோர்வில்லை, தோற்பில்லை
அன்பு நெறியில் அறன்கள் வளர்த்திட
நல்லவை நாட்டிட, தீயவை ஓட்டிட

நின்னை சரணடைந்தேன், கண்ணம்மா
நின்னை சரணடைந்தேன்

நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே…….

” தமிழுக்கு அமுதென்று பெயர் அந்தத் தமிழ் எங்கள் உயிருக்கு மேல்”

நன்றி : இணையம்