திருக்கோணாச்சல வைபவம்

May 6, 2012

திருக்கோணாச்சல வைபவம்

ஆக்கியோன் : ஹீமான். வே. அகிலேசபிள்ளை.

உள்ளடக்கம்

 • திருக்கோணாச்சல வைபவம்
 • திருகோணமலைச் சரித்திரம்
 • மச்சேந்திர பருவதச் சரித்திரம்
 • மகாவலி கங்கைச் சரித்திரம்
 • அகத்திய முனிவர் சரித்திரம்
 • இராவணன் சரித்திரம்
 • விட்டுணு மூர்த்தி சரித்திரம்
 • கன்னிகைத்தீர்த்தம் உற்பத்தியான சரித்திரம்
 • இராமர்சரித்திரம்
 • வரராம தேவர் சரித்தரம்
 • குளக்கோட்டு மகராசா திரிகோணாச்சலத்தில் திருப்பணி செய்து…
 • ஆடக சௌந்தரி சரித்திரம்
 • திருக்குளச் சரித்திரம்
 • திருக்கோணை நகரில் குடியேறிய சரித்திரம்
 • குளக்கோட்டு மகராஜா மணம் புரிந்த சரித்திரம்
 • குளக்கோட்டு மகராஜா சிவபதம் அடைந்த சரித்திரம்
 • கயவாகுராசன் சரித்திரம
 • நளச்சக்கரவத்தி சரித்திரம்
 • மாரூதபரரீக வல்லி சரித்திரம்
 • புவனேகபாகு சரித்திரம்
 • பரராஜசேகரன், செகராஜசேகரன் சரித்திரம்
 • ஆரியச் சக்கரவத்தி சரித்திரம்
 • தனியுண்ணாப் பூபால வன்னிமை கனகசுந்தரப் பெருமாளிடம்…..
 • தம்பலகமச் சரித்திரம்
 • தற்காலச் சரித்திரம்
 • வெள்ளை வில்லவத்தடி கோணநாயகர் சரித்திரம்
 • குளக்கோட்டு மகராசா மதுரையில் இருந்து அழைத்து வந்த…
 • வெருகற் சரித்தரம்
 • கோணேசர் கல்வெட்டு பொழிப்புரையுடன்…
 • இலங்கையில் உள்ள வரலாற்றுத்… சைவாலயங்களும் தீர்த்தங்களும்
 • திருக்கோணாச்சல நாகதம்பிரான்
 • திருக்கோணேசர் பூசை

Advertisements

திருக்கரைசை புராணம்

May 5, 2012

திருக்கரசை புராணம்

மகாவலி கங்கைக் கரையில் அமைந்துள்ள கரசையம்பதியில் அகத்தியரினால் ஸ்தாபிக்கப்பட்டதாகக் கருதப்படும் சிவலிங்கப் பெருமானின் மகத்துவத்தை தமிழ் விருத்தப்பாக்களில் கூறும் இப்புராணத்தை உமாபதி சிவாச்சாரியாரின் சீடர் ஒருவர் இயற்றியதாக இந் நூலில் இருந்து ஊகிக்கக் கூடியதாக உள்ளது. இந் நூல் இயற்றிய ஆசிரியரின் பெயரைச் சரியாக அறிந்து கொள்ள முடியவில்லை. வட மொழியில் சூத முனிவர் பாடிய புராணத்தைத் தழுவி இந் நூலை ஆசிரியர் தமிழ் விருத்தபாவில் பாடியதாக நூலில் இருந்து அறிய முடிகின்றது.

இப்புராணமானது கடவுள் வாழ்த்து, இலங்கைச் சுருக்கம், கங்கைச் சுருக்கம், தாபனச் சுருக்கம், பூசைச் சுருக்கமும், நூற்பயனும் எனும் ஐந்து பிரிவுகளைக் கொண்டுள்ளது. எல்லாமாக 170 விருத்தப்பாக்களைக் கொண்டு இப்புராணத்தில் ஆடி அமாவாசை தோறும் மகாவலி கங்கைத் தீர்த்த வைபவத்தின் போது படித்துப் பொருள் சொல்லப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பதிப்பாசிரியர்: இராசரத்தினம்.வ.அ.,(1975), “திருக்கரைசைப் புராணம்”, இந்து இளைஞர் மன்றம், மூதூர்

திருக்கரசை புராணம் நூல் வடிவில்…

 • திருக்கரைசைப் புராணம், பதிப்பாசிரியர்- வ.அ.இராசரெத்தினம், இந்து இளைஞர் மன்றம், மூதூர்
 • பாரம்பரிய வரலாற்றைப் பறைசாற்றும் நூற்கள் பாதுகாக்கப்பட வேண்டியவை ஆகும்.