தீவிரமான காலநிலை மாற்றங்களையும், அதன் விளைவுகளையும் அதிகரிக்கச் செய்யும் பூகோள வெப்பமாதல்


தீவிரமான காலநிலை மாற்றங்களையும், அதன் விளைவுகளையும் அதிகரிக்கச் செய்யும் பூகோள வெப்பமாதல்

Climate Change  & Extreme Weather Conditions

Climate Chang & Extreme Weather Conditions (1)

2009-07-29about0023

தொகுப்பு

01.    அறிமுகம்
02.    காலநிலை மாற்றக் காரணிகள்
03.    காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் பாதிப்புக்கள்
3.1     பௌதீக ரீதியான பாதிப்புக்கள்
04.       அனர்த்தங்கள்
4.1       காலநிலையியல் சார்ந்த இயற்கை அனர்த்தங்கள்
4.1.1    பனிப்புயல் (Blizzard)
4.1.2    வரட்சி (Drought)
4.1.3    இடிப்புயல் (Thunder Strom)
4.1.4    வெப்பக் காற்றலை (Heat Wave)
4.1.5    சூறாவளி (Cyclones)
4.1.6    ரொனாடோ (Tornado)
4.1.7    இடி மின்னல்  (Thunder and lightning)
4.1.8    காட்டுதீ (Wildfire)
4.1.9    வெள்ளப் பெருக்கு (Flood)
05.      உலக ரீதியாக  ஏற்பட்டுவரும் தீவிர காலநிலை மாற்றம்
06.     உலக ரீதியாக  ஏற்பட்டுவரும் தீவிர காலநிலை மாற்றத்தின் போக்கு
07.     முடிவுரை

2009-07-29about0023

Climate Chang & Extreme Weather Conditions (2)

2009-07-29about0023

01.    அறிமுகம்:

அண்மைக்காலத்தில் காலநிலையாளர்களினால் மட்டுமின்றி, அனைத்துத் தரப்பினராலும்  பேசப்படும் ஒரு விடயம் காலநிலை மாற்றமாகும். காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் பல்வேறு பாதிப்புக்கள் பூமியின் மனித இருப்பை கேள்விக் குறியாக்கியமையே இதற்கான பிரதான காரணமாகும். அண்மைக் காலத்தில் உலகம் முழுவதும் ஏற்பட்ட தானிய நெருக்கடி, பூகோள காலநிலை மாற்றத்தின் ஒரு விளைவு எனப் பலரும் குறிப்பிடுகின்றனர். காலநிலை மாற்றம் என்பது உலகின் மிக முக்கியமான சுற்றுச் சூழல் சவால்களில் தங்கியுள்ளது. வானிலை அம்சங்களான மழைவீழ்ச்சி, வெப்பநிலை, ஈரப்பதன், அமுக்கம், காற்று போன்ற பல்வேறு வளிமண்டல நிகழ்வுகளினால் ஏற்படும் மாற்றம் வானிலை மாற்றம் என்று அழைக்கப்படும். இவை ஒரு குறிப்பிட்ட இடத்தில் குறுகிய காலப்பகுதியில் ஏற்படும்.

காலநிலை மாற்றம் என்பது இக் காரணிகளின் நீண்ட கால மாற்றத்தினைக் குறிக்கும். மேற்குறித்த வானிலை அம்சங்களில் ஏதாவது ஒன்றின் அதிகரிப்போ அல்லது குறைவடைதலையோ இன்னொன்றினது அதிகரிப்பிற்கோ அல்லது வீழ்ச்சிக்கோ காரணமாக அமையலாம். ஏனெனில் இவை ஒவ்வொன்றும் ஒன்றுக் கொன்று பின்னிப் பிணைந்துள்ளது.

2009-07-29about0023

Climate Chang & Extreme Weather Conditions (3)

2009-07-29about0023

பூமி உருவான காலப்பகுதிகளில் காணப்பட்ட காலநிலை அம்சங்கள்  படிப்படியாக மாற்றமடைந்து வந்துள்ளன. எனினும் கடந்த 100 ஆண்டுகளாக இவற்றின் அதிகரிப்புக் குறிப்பாக வளிமண்டலத்தில் உள்ள சில வாயுக்கள், வெப்பநிலை, மழைவீழ்ச்சி என்பன அண்மைக் காலத்திலேயே மாற்றமடைந்து வருகின்றன. இவ்வாறான வானிலை அம்சங்களின் ஒட்டு மொத்தமான மாற்றம் காலநிலை மாற்றம் என அழைக்கப்படும்.

2009-07-29about0023

02.    காலநிலை மாற்றக் காரணிகள்:

காலநிலை மாற்றத்தினை பல்வேறு காரணிகள் தூண்டியுள்ளன. குறிப்பாக கைத்தொழில் புரட்சியின் பின்னர் மனித சமூகத்தில் ஏற்படுத்தப்பட்ட பல்வேறு மாற்றங்கள் காலநிலை மாற்றத்தினைத் தூண்டியுள்ளன. காலநிலை மாற்றத்துக்கான காரணிகளாகப் பின்வருவன காணப்படுகின்றது .

  •  கைத்தொழில் நடவடிக்கைகள்
  • விவசாய நடவடிக்கைகள்
  • சுவட்டு எரிபொருள் பாவனை
  • கால்நடை வளர்ப்பு
  • சீமெந்துத் தயாரிப்பு
  • ஞாயிற்றுக் கதிர் வீசலின் செயற்பாடு
  • எரிமலை வெடிப்பு
  • காடழிப்பு

2009-07-29about0023

Climate Chang & Extreme Weather Conditions (4)

2009-07-29about0023

Climate Chang & Extreme Weather Conditions (5)

2009-07-29about0023

03.    காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் பாதிப்புக்கள்:

காலநிலை மாற்றத்தின் காரணமாகப் பல்வேறு பாதிப்புக்கள் ஏற்படக் கூடுமென காலநிலையாளர்கள் குறிப்பிடுகின்றனர். அந்த வகையில் காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் பாதிப்புக்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம்.

  •       பௌதீக ரீதியான பாதிப்புக்கள்
  •       பொருளாதார ரீதியான பாதிப்புக்கள்
  •       சமூக ரீதியான பாதிப்புக்கள்

2009-07-29about0023

Climate Chang & Extreme Weather Conditions (6)

2009-07-29about0023

3.1 பௌதீக ரீதியான பாதிப்புக்கள்:

பௌதீக ரீதியான பாதிப்புக்களில் பல வேறு பாதிப்புக்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகின்றது. அந்த வகையில் பின்வரும் பாதிப்புக்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவை வெப்பநிலை உயர்வு, வெள்ளப் பெருக்கு, பனிமலைகள் உருகுதல், வரட்சி, பவளப்பாறைகள் அழிதல், வானிலை மாற்றம் ஏற்படுதல் என்பவற்றைக் குறிப்பிடலாம்.

2009-07-29about0023

04.     அனர்த்தங்கள்:

இயற்கை அனர்த்தங்கள் என்பது இயற்கை ஆபத்துகளில் இருந்து வேறுபட்ட எண்ணக்கருவாகும். சதாரணமாக இயங்குகின்ற புவித்தொகுதியில் இயற்கையாக எளிர்ச்சியுறும் பௌதீகச் செயன்முறைகள் பொதுவாக இயற்கை ஆபத்துக்கள் என வரையறுக்கப்படும்.  அனர்த்தங்கள் பல வகைப்படும்.

  • நீரியல் அனர்த்தம்
  • இயற்கை அனர்த்தம்
  • புவிவெளியுருவவியல் அனர்த்தம்
  • காலநிலை அனர்த்தம்

என நான்கு வகைப்படும். குறிப்பாக காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் அனர்த்தங்கள் பற்றி இங்கு நோக்குவோம்.

2009-07-29about0023

Climate Chang & Extreme Weather Conditions (7)

2009-07-29about0023

4.1 காலநிலையியல் சார்ந்த இயற்கை அனர்த்தங்கள்:

பனிப்புயல் (Blizzard)
வரட்சி (Drought)
இடிப்புயல் (Thunder Strom)

வெப்பக் காற்றலை (Heat Wave)
சூறாவளி (Cyclones)
ரொனாடோ (Tornada)
இடி மின்னல்  (Thunder and lightning)
காட்டுதீ (Wildfire)
வெள்ளப் பெருக்கு (Flood)

2009-07-29about0023

Climate Chang & Extreme Weather Conditions (8)

2009-07-29about0023

மேற்குறித்த இயற்கை அனர்த்தங்கள் அனைத்தும் உலகின் வரலாற்றில் முன்னர் எப்போதாவது தான் இடம்பெறும். அவையே இன்றுஇன்று அடிக்கடி நிகழ்ந்து கொண்டு இருப்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். இருப்பினும் இக் காலநிலையினால் ஏற்படும் மாற்றங்கள் ஒரு நீண்ட கால இடைவெளியின் அளவில் தான் இடம் பெற்றுக் கொண்டிருந்தது. ஆனால் இவ் அனர்த்தங்கள் அடிக்கடி இடம் பெறுவதினையே தீவிர காலநிலை மாற்றம் எனச் சிறப்பாக அழைக்கின்றோம்.

2009-07-29about0023

4.1.1 குளிர்ச்சியான பனிப்புயல் (Blizzard):

காலநிலை மாற்றங்களினால் அல்லது வளிமண்டலச் செயற்பாடுகளினால் உருவாகும் இயற்கை ஆபத்துக்களுக்குள் குளிர்ச்சியான பனிப்புயல் வீசுதல் அதிக சேதங்களை இடைவெப்பப் பிரதேசங்களில் ஏற்படுத்தி வருகின்றன. பலமான காற்றுடன் கூடிய பனிப்புயல், சுழல்காற்று, பனிமூட்டம் என்பன ஐக்கிய அமெரிக்காவில் 1940 இல் இடம் பெற்ற மிகப் பாரிய பனிப்புயல் வீசுகையாக பதிவாகியுள்ளன. இதன் போது பெறுமதி மிக்க மரங்கள் ஆயிரக்கணக்கில் சாய்ந்து விழுந்ததுடன் பலத்த கட்டிட இடிபாடுகளும், உயிரிழப்புக்களும், காலநடை விலங்கின அழிவுகளும், விளைபயிர் நாசங்களும் ஏற்பட்டு வருகின்றன.

2009-07-29about0023

Climate Chang & Extreme Weather Conditions (9)

2009-07-29about0023

2009-07-29about0023

குளிர்ச்சியான பனிப்புயல் (Blizzard)

நன்றி : இணையம்

2009-07-29about0023

4.1.2 வெப்பக் காற்றலை (Heat Wave):

வெப்பக் காற்றலை வீச்சு என்பது குறிப்பிடக் கூடிய ஒரு வானியல் நிகழ்வாகும். இவ் ஆபத்து மிக மிக அரிதாகவே ஏற்பட்டுள்ளது. திடீரென வீசும் காற்றுக்கள் மிகை வெப்பமாகக் காணப்படும். இதன் பாதிப்புக்கள் ஐரோப்பிய நாடுகளில் அதிக பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றது. ஜேர்மனி, பிரான்ஸ், இத்தாலி போன்ற நாடுகளில் 2003 இல் (Katabatic Wind) கற்றபற்றிக் வின்ட் என்ற பெயரில் ஐரோப்பிய வெப்பக் காற்று வீசியதால் மக்கள் மயக்கமுற்றனர். பயிர்கள், பயன்தரு மரங்கள் கருகிச் சாம்பலாகின. ஐரோப்பிய வெப்பக் காற்றினால் (European heat wave), வாந்தி, மயக்கம், உடல் எரிவு போன்றதொற்று நோய்களுக்கு மக்கள் ஆளாகினர். கால்நடைகளும் வரட்சியால் இறக்க நேரிட்டது.

2009-07-29about0023

2009-07-29about0023

வெப்பக் காற்றலை (Heat Wave)

நன்றி : இணையம்

2009-07-29about0023

Climate Chang & Extreme Weather Conditions (10)

2009-07-29about0023

4.1.3 வரட்சி (Drought):

எல்நீனோ போன்ற காலநிலை மாற்றங்களினாலும் புவிவெப்பமடைவதனாலும் இவ் அசாதாரண நிலைமை ஏற்படுகின்றது. இவை தவிர மனிதனது செயற்பாடுகளான காடழிப்பு, காடுகளுக்குத் தீ வைத்தல், கைத்தொழில் நடவடிக்கைகளால் வளி மாசுறுதல் போன்ற காரணங்களாலும் வரட்சி ஏற்படுகின்றது. இத்தகைய அசாதாரண நிலையின் போது விவசாயத் தேவைகள், குடிநீர்த் தேவைகளுக்கு முற்றாகவே நீர் கிடைக்காத நிலை தோன்றுகின்றது. இலங்கையில் அனுராதபுரம், பொலநறுவை, கிளிநொச்சி, மன்னார், அம்பாந்தோட்டை, வவுனியா போன்ற மாவட்டங்களில் இவ் ஆபத்து ஏற்பட்டு வருகின்றது.

உலகில் வரட்சியால் ஏற்பட்ட இழப்புக்களும், சேதங்களும்:

  • 1900        –               இந்தியா (3.5 மில்லியன் மக்கள் மரணத்தை தழுவிக் கொண்டனர்
  • 1921- 22    –             சோவியத் யூனியன் (250 000 பேர் மரணத்தைத் தழுவினர்)
  • 1928-30        –          வடமேற்கு சீனா (3 மில்லியன் மக்கள் மரணத்தைத்  தழுவினர்)
  • 1936-1941    –         சீனா Sichuan Province (2.5 மில்லியன் மக்கள் பாதிக்கபட்டனர்)
  • 2006    –        மேற்கு அவுஸ்ரெலியா (5 வருடங்களுக்கு மேல் வரட்சி நிலைமை  நீடித்ததுடன் காட்டுத்தீ அபாயம் அடிக்கடி ஏற்பட்டுள்ளது)
  • 2006    –       சீனா Sichuan Province (8 மில்லியன் மக்கள் குடிநீர்த் தட்டுப்பாட்hல் அவதியுறுகின்னறனர். 7 மில்லியன் கால்நடைகள் குடிநீர் இன்றிப் பரிதவிக்கின்றனர்)

மேற்குறித்த வரட்சி நிலைமைகளை அவதானித்து ஆய்வு செய்த விஞ்ஞானிகளது கருத்தின் படி இந் நூற்றாண்டில் மிக மோசமான வரட்சி நிலைமைகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகத் தெரியவருகின்றது.

2009-07-29about0023

வரட்சி (Drought)

நன்றி : இணையம்

2009-07-29about0023

4.1.4 ரொனாடோ (Tornado):

திரண்ட மேகங்கள் விருத்தியடைவதால் கடுமையான காற்றுக்களைக் கொண்ட புயல் ஏற்படுகின்றது. இடிமுழக்கத்துடன் கூடிய புயற்காற்றுடன் ரொனாடோ ஏற்பட்டாலும் கூட காற்றின் கதி மணிக்கு 50 தொடக்கம் 300 (kmph) வரை காணப்படும். அதாவது புயற்காற்றுக்கள் வீசும் எல்லைகளையும் கடந்து வீசக் கூடிய வேகம் உடையதே இச் சுழல் காற்று. அயனச் சமூத்திர நீர்ப்பரப்புக்களில் அதிக வெப்பம் காரணமாக வளி மேல் எழும் பொழுது நீரும் சேர்நது எழும்பி வரும் காட்சியைக் கடந்த ஏப்ரல் மாதப்பகுதியில் கொழும்பு மாவட்டத்தில் மீரிகம, ஹாப்பிட்டிகம பகுதியில் காணக்கூடியதாக இருந்தது.

உலகில் மெக்சிக்கோ குடாவை அண்டிய பிரதேசங்களிலும்மேற்கு ஐக்கிய அமெரிக்கப் பிரதேசங்களிலும் இவ் இயற்கை இடர் அதிகளவில் இடம் பெறுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக மிக மோசமாக ரொனாடோ தாக்கிய வரலாறு  1999 மே மாதம் 03 ஆம் திகதி ஒக்ரஹோமாவில் பதிவாகியுள்ளது.

Climate Chang & Extreme Weather Conditions (11)

2009-07-29about0023

ரொனாடோ (Tornado)

நன்றி : இணையம்

2009-07-29about0023

4.1.5 இடி மின்னல்  (Thunder and lightning):

விண்ணில் கண நேரத்தில் தோன்றி மறையும்  பளிச்சிடும் ஒளிக்கீற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்படும் அதிர்வொளியும் முறையே மின்னல் எனவும் இடி எனவும் அழைக்கப்படும். மேகங்களில் உள்ள நீர் ஆவியாகி மேலே செல்லும் பொழுது மேகங்களின் மேற்பாகம் வளியுடன் உராய்வதால் அது வெப்பமேற்றப்பட்டு மின்சாரமாக மாறுகின்றது. மேகங்களின் மேற்பகுதியில் நேர்மின்னாகவும், மேகங்களின் அடிப்பகுதியில் மறை மின்னாகவும் செல்லும் பொழுது மேகங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொள்வதால் தீப்பொறி ஏற்பட்டு மின்னலாக மாறிவிடுகின்றது. இவ்வாறான மின் தாக்கம் மேகத்தில் இருந்து புவியை நோக்கிச் செல்லுதலையே இடி என்று கூறுகின்றனர். இது புவியை நோக்கிச் செல்லும் வேகம் 103 ms1 என்ற கதியுடனாகும். ஆய்வுகளின் படி பூமியில் வெப்பம் அதிகரிக்க அதிகரிக்க மின்னல் தோன்றும் சந்தர்ப்பங்கள் nதிகரித்துக் காணப்படும். இடியுடன் கூடிய மழையின் போதும் மின்னல் தாக்கம் அதிகரித்துக் காணப்படும்.

புவிக் கோளத்தில் அயனவலயத்துக்குட்பட்ட  பிரதேசங்களில் குறிப்பாக பருவக்காற்று இடைக்காலங்களில் (மார்ச், ஏப்ரல்,ஒக்ரோபர், நவம்பர்) இலங்கை உட்பட அனைத்து ஆசிய நாடுகளிலும் இவ் இடரின் தாக்கம் அதிகமாக காணப்படும். பெருமளவான எண்ணிகையில் உயிர்ச்சேதங்களை ஏற்படுத்தாவிடினும் திறந்த வெளிகளில் நடமாடுவோர் மின்னலியல் உபகரணங்களை பயன்படுத்துவோர் உயிர் இழக்கின்றனர். பயிர் நிலங்கள் மின்னல் தாக்கத்தினால் பட்டுப்போகும் தன்மை உண்டு. பல கோடி பெறுமதியான இலத்திரனியல் உபகரணம் செயலிழந்து போகின்றன. இலங்கையில் அவிசாவளை, மத்துகம, காலி, களுத்துறை பகுதிகளில் இடி மின்னலின் தாக்கம் அடிக்கடி ஏற்பட்டு வருகின்றது.

lightning-and-thunder

2009-07-29about0023

இடி மின்னல்  (Thunder and lightning)

நன்றி : இணையம்

2009-07-29about0023

4.1.6 சூறாவளி (Cyclones):

சூறாவளிகள்  கரிகேன்,தைபூன், அயனச்சூறாவளி எனப் பல பெயர்களால் கூறிப்பிடப்பட்ட போதிலும் இச் செயன் முறைகள் ஒவ்வொன்றும் ஒன்றுடன் ஒன்று நெருங்கிய தொடபுடையனவே. அண்மை காலங்களில் பூகோள வெப்பமாதலினால் சமுத்திர நீர் பரப்பும் அதிக வெப்பத்துக்குள்ளாகின்றது. இவ்வாறான சந்தர்ப்பங்களினால் அடிக் அடி சூறாவளிகள் ஏற்படுகின்றது.

சூறாவளிகள் அதிகமாக சமுத்திரப்பகுதிகளில் மையம் கொள்கின்றது. சமுத்திரப்பகுதிகளில் குளிரானதும் வெப்பமானதுமான நிரம்பிய காற்றுக்கள் ஒன்றுடன் ஒன்று மோதுவதால் வெப்பக்காற்றுக்கள் சூழன்று மேல் எழுகின்றன. அவ் வெற்றிடத்ததை நிரப்புவதற்காக காற்றுக்கள் உயர் அமுக்கப் பகுதியில் லிருந்து விரைகின்றது. இவ்வாறு விரையும் காற்றுக்கள் வேகமாக சூழன்று மேலலொழும் போது சூறாவளி ஏற்படுகின்றது.

உலகில் அதிக உயிரிழப்புக்களை ஏற்படுத்தி சூறாவளி 1970 இல் அத்திலாந்து சமுத்திரத்தில் மையம் கொண்ட Bhola Cyclone கரிகேன் சூறாவளி ஆகும். மிக அண்மைக்காலத்தில் அதிக நாசம் விளைவித்த ஹரிக்கேன், கத்தரீனா (Katrina) 2005 இல் ஐக்கிய அமெரிக்கக் குடாக்களை  நகர்களைப் பாதித்துப் பதிவாகியுள்ளது.

Climate Chang & Extreme Weather Conditions (12)

2009-07-29about0023

சூறாவளியின் உருவாக்கம்

நன்றி : இணையம்

2009-07-29about0023

சூறாவளி (Cyclones)

நன்றி : இணையம்

2009-07-29about0023

4.1.7 இடிப்புயல் (Thunder Strom):

இடிப்புயல் என்பது இடியுடன் கூடிய புயலாகும். இப்புயல்கள் மாறாமல் காணப்படும் மேற்காவுகைத் திரண் முகில்களைக் கொண்டதாகவும் பலமான காற்று இடி மின்னல் மழை போன்றனவற்றை திடீரென ஏற்படுத்தக் கூடியதாகவும் காணப்படும். சில சமயங்களில் பனியுடனும், பனிக்கட்டியுடனும்   கூடிய மழையையும் தோற்றுவிக்கும். இலங்கையைப் பொறுத்தவரையில் இடைப்பருவக்காற்றுக் காலங்களில் அதிகரித்த மேற்காவுகையினால் புயல்கள் உருவாகின்றன. இத்தகைய திரண் முகல்களால் பாதிக்கபட்டும் இடங்களில் அதிக செறிவான மழையும், இடி  மின்னலும் உருவாகின்றது.

இடிப்புயல்கள் ஆபத்தானவை. மின்னல், இடி, சுழல் காற்று, பலத்த நீர்பபெருக்கு, தீவிரமான நீர் வீழ்ச்சி ஆகிய பல இடர்களை ஒரே நேரத்தில் தோற்றுவிக்கக் கூடியன.  இலங்கையைப் பொறுத்தவரையில் வருடத்தில் சித்திரை மாதத்தில் இதன் தாக்கம் உச்சமாக நிகழும். புள்ளிவிபரப் பதிவுகளின் படி இடியுடன் கூடிய மாலை வேளை மழைகள் பதிவாகி வருகின்றது. இடி, மின்னல், சுழல் காற்று என்பன பல வகை ஆபத்துக்களைத் தோற்றுவிக்கின்றன.

Climate Chang & Extreme Weather Conditions (13)

2009-07-29about0023

இடிப்புயல் (Thunder Strom)

நன்றி : இணையம்

2009-07-29about0023

4.1.8 காட்டுதீ (Wildfire):

காட்டுத்தீயானது கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு காடுகளை அழித்துச் செல்லும் தன்மை வாய்ந்தது. வெப்பக்காற்றலை, வரட்சி, வேகமாக வீசும் காற்றுக்கள் என்பன ஏதோ ஒரு ; வகையில் காரணமாக அமைந்து விடுகின்றன.  நாளுக்கு நாள் அதிகரித்து வரும் காட்டுத்தீ அபாயத்தினால் உல்லைக் கிரமங்களில் வாழும் மக்களுக்கு ஆபத்துக்கள் ஏற்படுகின்றது. காட்டுத்தீ அபாயங்களுக்குள் இதுவரைப் பதிவு செய்யப்பட்ட பாரியளவிலான தீப்பற்றல் கீழே விபரிக்கப்பட்டுள்ளது.

Climate Chang & Extreme Weather Conditions (14)

1960        –    கலிபோனியா
1997-1998    –    இந்தோனேசியா, யாவா
2002        –    கொலராடோ
2003        –    கலிபோனியா
2006        –    அவுஸ்ரெலியா, சிட்னி, கன்பெரா
2009-07-29about0023

காட்டுதீ (Wildfire)

நன்றி : இணையம்

2009-07-29about0023

4.1.9 வெள்ளப் பெருக்கு (Flood):

வருடா வருடம் உலகில் இடம்பெற்று வரும் இயற்கை ஆபத்துக்களுக்குள் பரவலாக இடம்பெறும் ஆபத்துக்களுக்குள் வெள்ளப் பெருக்கும் ஒன்றாகும். பருவகாலங்களில் ஏற்படும் சூறாவளி, புயல்கள் போன்றவற்றால் ஏற்படும் அதிக செறிவான மழைவீழ்ச்சியால் வெள்ளம் அடிக்கடி ஏற்படுகின்றது. இப்பருவங்களில் கூட இன்று பல மாறுதல்களினால் பருவமழையில் கூட பல வேறுபாடுகள் காணப்படுகின்றது. இம் மாற்றங்களின் போது மழைவீழ்ச்சி கூடுதலாக உள்ள போது வெள்ளப் பெருக்குகள் இடம் பெற்ற வண்ணம் உள்ளது.

இலங்கையில் கொழும்பு, களுத்துறை, மாத்தறை, அம்பாறை, காலி, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் வெ;வளப்பெருக்கு அபாயம் அடிக்கடி ஏற்பட்டுவருகின்றது.

Climate Chang & Extreme Weather Conditions (15)

2009-07-29about0023

வெள்ளப் பெருக்கு (Flood)

நன்றி : இணையம்

2009-07-29about0023

அயனச் சூறாவளியினால் ஏற்பட்ட குறிப்பிடக் கூடிய வெள்ள அனர்த்தங்கள்:

  • சீனிவில் 1975 இல் தைப்பூன்
  • ரெக்காஸ் 2001 இல் அலிசான்
  • நியுஒலியன்ஸ் 2005 ஹரிக்கேன், கத்தரினா

2009-07-29about0023

05.    உலக ரீதியாக  ஏற்பட்டுவரும் தீவிர காலநிலை மாற்றம்:

Climate Chang & Extreme Weather Conditions (16)

2009-07-29about0023

06.     உலக ரீதியாக  ஏற்பட்டுவரும் தீவிர காலநிலை மாற்றத்தின் போக்கு:

Climate Chang & Extreme Weather Conditions (17)

2009-07-29about0023

07.    முடிவுரை:

காலநிலை மாற்றத்தினால் ஒரு சங்கிலிக் கோர்வையான விளைவுகளை பூமி எதிர்நோக்கியுள்ளது. இனியும் எதிர் நோக்கும். காலநிலை மாற்றத்தினால் காலநிலையானது தீவிரமாக மாறிவருகின்றது. பூமியின் சமநிலையில் குழப்பங்களை ஏற்படுத்துவதினால் நாம் பாரிய விளைவுகளை எதிர்  நோக்க வேண்டியிருக்கும். எனவே பூமியைக் காப்பாற்றுவது எம் ஒவ்வொருவரினதும் தலையாய கடமை எனக் கருத்திற் கொண்டு நாம் செயற்பட வேண்டும்.

2009-07-29about0023

Reference

  • Kysely, K., and M. Dubrovsky, 2005: “Simulation of extreme temperature events by a stochastic weather generator: Effects of interdiurnal and interannual variability reproduction.” International Journal of Climatology, 25, 251-269.
  • Qian, B., S. Gameda, and H. Hayhoe, 2008: “Performance of stochastic weather generators LARS-WG and AAFC-WG for reproducing daily extremes of diverse Canadian climates.” Climate Research, 37, 17-33
  • Semenov, M.A., 2008: “Simulation of extreme weather events by a stochastic weather generator.” Climate Research, 35, 203-212
  • Washington.,( 2008),Global Climate Change and Extreme Weather Events, Institute of Medicine (US) Forum on Microbial Threats.

2009-07-29about0023

து.ரஜனி

B.A. (Hons-Geos-EUSL), M.A (University of Peradeniya), M.Phil Reading at University of Peradeniya

2009-07-29about0023

Comments are closed.